திரைப்படத்துறை
திரைப்படத்துறை
1984–1988 குழந்தை நட்சத்திரமாக
பத்து வயதில், வெற்றி (1984) என்ற
படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு
விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988)
போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி
நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985)
படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
1992–1996 துவக்கம்
இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992)
படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993)
படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூல் செய்தது. 1994 இல், இவர் ரசிகன் படத்தில்
தோன்றினார், இதுவும் நல்ல வசூல் செய்தது. இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்ட
முதல் படம் இதுதான். இந்த அடைமொழி பிற்காலத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள்
மத்தியில் பிரபலமாக விளங்கியது. இவர் தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற
படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். மேற்குறிப்பிட்ட இரண்டாவது படத்தில் இவர் அஜித் குமாருடன் இணைந்து
நடித்தார். பின்னர் விஷ்ணு மற்றும் சந்திரலேகா ஆகிய
படங்களில் நடித்தார். 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.